Home » டொனால்ட் டிரம்ப்: சரித்திரத்தில் படிந்த கறை
குற்றம்

டொனால்ட் டிரம்ப்: சரித்திரத்தில் படிந்த கறை

ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த குற்றச்சாட்டு. விசாரணை. கைது. ஜாமீன். கண்காணிப்பு. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நிகழ்ந்திருப்பது ஒரு வகையில் அமெரிக்க சரித்திரத்தின் அழிக்க முடியாத கறைகளுள் ஒன்று.

ஓஜே சிம்ப்சன், கொலைக்குற்றத்தில் இருந்து விடுதலையான போதும், ஒரு திருட்டுக் குற்றத்தில் கைதாகி 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, இடைக்கால விடுதலையில் வரும்முன் பல வருடங்களைச் சிறையில் கழிக்க நேர்ந்தது. போதைப்பொருள் கடத்தலில் மிகவும் புகழ் பெற்ற அல் கப்போன்கூடத் தடுக்கி விழுந்தது ஒரு வரி ஏய்ப்பு வழக்கில்தான். சில சமயங்களில் சின்னக் குற்றங்கள் ஒருவரை அடிசறுக்க வைக்கும் பெரிய தூண்டில்கள்.!

தான் செய்கிற எந்தத் தவறையும் ஒப்புக்கொள்ளாமலும் எல்லாவற்றையும் திரித்துப் பேசியும் மக்களின் உள்மனச் சந்தேகங்களைத் தீ வார்த்து வளர்த்துப் பிளவுபட வைத்தவர் என்ற முறையிலும், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என அனைவரையும் இழிவாகப்பேசியவர் என்ற வகையிலும் முதலிடம் வகித்த அதிபர் டிரம்பிற்கு இந்தக் குற்றவியல் குற்றச்சாட்டும் கூட முதல்முறைதான்! இரண்டுமுறை பதவி நீக்கம் செய்ய காங்கிரசால் வாக்களிக்கப்பட்ட ஒரே அதிபரும்கூட.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • நிகழ்வுகளும் சரித்திரம் கலந்த உண்மைகளும! பலே!

    விஸ்வநாதன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!