ஜீன் கரோலின் டிரம்ப் மீது சுமத்திய பாலியல் அவதூறுக் குற்றச்சாட்டு உரிமையியல் வழக்கு நிரூபணம் ஆகி, டிரம்ப் அவருக்கு 83 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்திருக்கிறது. இன்னும் ஆபாசப்பட நடிகைக்கு நிதி கொடுத்த வழக்கும், பெண்கள் மீதான அவதூறுப் பேச்சுக்களுக்கெதிரான பெண்கள் திரண்டுவந்த பேரணிகளும் நினைவில் இருக்கின்றன! எனவே பெண்கள் தினம் கொண்டாடும் வேளையில், அமெரிக்காவின் குடியரசுக் கட்சி நம்பிக்கை நட்சத்திரமான முன்னாள் அதிபர் டிரம்ப்பை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும்!
அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக மாற்றுவேன் (Make America Great Again) என்ற தாரக மந்திரத்தோடு அதிபராக வந்த டிரம்ப் நான்கு வருடங்களில், சமூகச் சமன்பாட்டில், பாலியல் சமன்பாட்டில், பொருளாதாரச் சமன்பாட்டில், பெண் சுதந்திரத்தில் அமெரிக்காவை நானூறு வருடங்களுக்குப் பின்னால் கொண்டு சென்றார் என்றால் மிகையாகாது!
நான்கு குற்றவியல் வழக்குகள் விசாரணையில் இருக்க, இரண்டு நியூயார்க் பாலியல் உரிமையியல் வழக்குகளில் குற்றம் நிரூபணமான பின்னும் கூட கொஞ்சம் கூட தளராத ஒரு தைரியம் டிரம்ப்பைப் பார்த்துத்தான் நெஞ்சுரம் என்றால் என்ன என்று, ஒரு சின்ன தேர்வில் தோல்வி கண்டு தற்கொலை நாடும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
Add Comment