அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட துளசி கப்பார்ட், புலனாய்வுத்துறையின் முதல் பெண் தலைமை அதிகாரி ஆவார். முதல் இந்து மதத்தை சேர்ந்த அதிகாரி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவர் இந்திய வம்சாவளியினர் அல்ல, இந்து மதத்தைத் தழுவிக்கொண்டவர்.
செனேட்டில் நடந்த தீவிர நேர்காணலில் இரண்டு கட்சி உறுப்பினர்களின் கேள்விக் கணைகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறித்தான் போனார் துளசி கபார்ட். சிரியாவின் சர்வாதிகாரி பாஷர் அல் ஆசாத்துக்கும், ரஷ்யாவின் சர்வாதிகாரி புதினுக்குமான துளசியின் ஆதரவைப் பற்றிய கேள்விகள் அவை. எட்வர்ட் ஸ்னோடனுக்கு துளசி அளித்த ஆதரவு பற்றிய கேள்வி அம்புகளும் வந்தன. அவரால் அவற்றை சமாளிக்க முடியவில்லை. டிரம்ப் தன் கட்சி உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் அழைத்து, கேள்விகளை நிறுத்தச் சொல்லி மிரட்டினார்.
அதன் பின் நடந்த வாக்கெடுப்பில் 52-48 என்ற வாக்கு எண்ணிக்கையில் பதவி நிச்சயமானது. தேசிய புலனாய்வுத்துறை தலைமை அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுக் கட்சியின் மதிப்புக்குரிய மிச் மெக்கானல்ட் கடைசிவரை அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவே இல்லை. யாரிந்த துளசி?
Add Comment