Home » ஆதாயமின்றி அசையாது ரஷ்யா
உலகம்

ஆதாயமின்றி அசையாது ரஷ்யா

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புத் தொடங்கிய (24-பிப்-2022) நான்கு நாள்களில் முதல் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது. அடுத்த இரு மாதங்கள் தொடர்ந்தும் எந்தத் தீர்வுக்கும் வரமுடியவில்லை. இருநாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்க மூன்று வருடங்களாகி இருக்கிறது. இரண்டு மணிநேரத்துக்கும் குறைவாகத் துருக்கியில் நடந்த இந்தச் சந்திப்பில் இப்போதும் முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆயிரம் பிணைக்கைதிகள் பரிமாற்றத்துக்கு இருவரும் ஒப்புக்கொண்டது மட்டுமே இதன்மூலம் கிடைத்திருக்கும் ஒரே பலன்.

ரஷ்யாவில் கொண்டாடப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு மூன்று நாள்கள் இடைக்காலப் போர்நிறுத்தம் அறிவித்திருந்தார் புதின். அதுவும் முழுமையாக நடக்கவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கே முப்பது நாள் போர்நிறுத்தத்தை ரஷ்யா அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அதுவும் பலனில்லை. துருக்கியில் நடக்கப்போகிறது என்று முடிவானவுடன், உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் பங்குபெற வேண்டுமென்று கட்டளை பிறப்பித்து விட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ரஷ்ய அதிபர் இதில் நேரில் பங்குபெறுவார் என்று அவரும் எதிர்பார்த்தார். ஆனால் அதிபர் புதின் கொஞ்சமும் மசியவில்லை. மேல்மட்ட அதிகாரிகளை மட்டும் அனுப்பி வைத்தார். ஏமாற்றம் இருந்தாலும் சமாளித்துக் கொண்ட அதிபர் டிரம்ப், தான் வருவதாக இருந்தால் மட்டுமே புதினும் வந்திருப்பார். நாங்கள் இருவரும் இல்லாமல் அங்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்றார். சொன்னபடியே ஒரு சம்பிரதாயத்துக்கு நடந்து முடிந்திருக்கிறது சமாதான பேச்சுவார்த்தை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!