உக்ரைனில் போர் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாக்மூத்தை அடுத்த பெரிய வெற்றியை நெருங்கிவிட்டது ரஷ்யா. அதன் பக்கத்திலேயே இருக்கும் அவ்டீவிக்கா நகரில்தான். இனியும் முன்னேறிக் கொண்டே போகலாம். ஒன்றும் அவசரம் இல்லை. வாக்னர், செச்சென் படைகளுக்குப் பதில், கியூபாவிலிருந்து ஏற்பாடுகள் பலமாகிவிட்டன. அணு ஆயுத ஏவுகணைச் சோதனையும் தயார். கைப்பற்றிய கையோடு, அரசாங்கத்தையும் அமைத்து விடலாம். ஏற்கெனவே நான்கு உக்ரைனியப் பிராந்தியங்களில் செய்தாயிற்றே…..
அவசரமெல்லாம் உக்ரைனுக்குத் தான். மேற்குலக உதவிகள் நின்று விட்டதாகத் தோன்றும் கெட்ட கனவுகள், உண்மையாகவும் வாய்ப்புள்ளதே! ஐரோப்பிய உதவிகள் வாக்குறுதிகளாகப் புதுப்பிக்கப்படுவதோடு சரி. வேறொன்றும் நடப்பதில்லை. ரஷ்யா முன்னேறிக் கொண்டே வருவதும்; உக்ரைனால் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க முடியாததும் உலகமறிந்த ‘உஷ் உஷ்’ ஆகிவிட்டது. ரஷ்யாவைத் திசைதிருப்ப, மாஸ்கோவிலும், கிரீமியாவிலும் செய்திகளுக்காக மட்டும் சேதமின்றிக் குண்டுகள் வெடிக்கின்றன.
இதற்குள் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலைத் தாக்கி விட்டார்கள். காத்திருந்த இஸ்ரேலும் போரை அறிவித்து விட்டது. இஸ்ரேலுக்கு மேற்குலக நண்பர்களின் ஆதரவுகள் குவிகின்றன. இப்பக்கம் ரஷ்யாவும், துருக்கியும் ஹமாஸை ஆதரிக்க, உக்ரைன் போரில் இவர்களோடு இணைகிறார்கள் ஹங்கேரியும், ஸ்லோவாகியாவும். அரபுலக நாடுகள் மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்துகின்றன. இன்னும் எப்பக்கமும் சாயவில்லை. இவர்களின் அமைதி, உலகைகாக்க வல்லது என்பது அவர்களுக்கும் தெரியும்.
Add Comment