இளையராஜா எப்படி இசையமைக்கிறார் என்பதைப்போலவே இன்னொரு மில்லியன் டாலர் கேள்வி, இன்ன பாடலை இன்னார்தான் பாட வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்கிறார் என்பதும். பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதிக்கொண்டிருக்கும்போதே, அவர் மனதில் தோன்றும் பாடகர் / பாடகி பெயரை இசைத்தாளின் ஓரத்தில் எழுதி விடுவார் என்கிறார்கள், அவரோடு பணியாற்றியவர்கள்.
ஒரு மேதையின் மூளை எப்படி வேலை பார்க்கும் என்று அறியும் வசதி நமக்கு இல்லாததாலும். அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு பதில் பெற்றுவிடக் கூடிய சாமர்த்தியம் இன்றைய மனிதப் பிறவியாகிய யாருக்கும் இல்லையென்பதாலும், நாமேதான் அலசிப்பார்க்க வேண்டியிருக்கிறது. ஓரளவிற்கு தொடர்ந்து அவரிசையைச் சில தசாப்தங்கள் கேட்டு வந்தால், அதில் ஒரு பேட்டர்ன் இருப்பதை உணர்ந்துகொள்ளலாம்.
அறிமுகப் பாடலில் நாயக பாவம் அதிகம் வேண்டுமென்றால் எஸ்.பி.பி., அதுவே பி அண்ட் சி செண்டருக்கு வலுவாகச் செல்லவேண்டுமென்றால் மலேசியா வாசுதேவன். சந்தங்களில் சற்று கர்நாடக சங்கீத சங்கதிகள் உண்டென்றால் யேசுதாஸ், தாலாட்டு, காதலிலேயே அம்மா பாவனையைக் கொண்டுவர வேண்டுமா- பி.சுசீலா, காதற் பாடல்தான் என்றாலும் சற்று ஆச்சாரமான ஹீரோயின் என்று முடிவெடுத்து விட்டால் வாணிஜெயராம். துள்ளலான பெண் வரிகள் வேண்டுமென்றால் ஜானகி என்று ஒருவாரியாக இந்த வரிசை எப்படி அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உமா ரமணன் என்றாலே “நீரோட்டம் போலோடும்” வார்த்தைகள் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. கட்டுரை ஆழமாக நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது.கட்டுரையாளருக்கு மனமார்ந்த பாராட்டுகள்..
தெளிவான தவலுடனான அருமையான புகழஞ்சலி, நன்றி ஐயா.