16 – திரு.வி. கலியாணசுந்தர முதலியார் (26.08.1883 – 17.09.1953)
தமிழ்த்தென்றல் என்ற அடைமொழிக்கு உரியவர் ஒருவர் தமிழிலக்கிய உலகில் இருந்தார். அவர் தமிழறிஞர் மட்டுமல்ல; மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி. எப்படிப்பட்ட தொழிற்சங்கவாதி? இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானிய அரசு, ஒரு தொழிற்சங்கவாதியாக அவரை நாடு கடத்த வேண்டும் என்று முடிவெடுத்திருந்த அளவு, தொழிற்சங்கத்தின் ஆணிவேராக இருந்த தொழிற்சங்க வாதி. அதுவும் அந்த சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் நிருமானத் தலைவர்களில் ஒருவர் அவர். அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே அந்தச் சென்னை தொழிலாளர் சங்கம்தான் முதல்முதலில் தொடங்கப்பட்ட தொழிலாளர் நலச் சங்கமாகும். !
Add Comment