107. கட்டை
உன்னால் என்னைக் காண முடியும் சார்வாகனே. நீ எப்போதும் போல என்னைக் கண்டே உரையாடலாம். ஆனால் உன்னருகே யார் நெருங்கினாலும் அவர்களுக்கு நான் புலப்பட மாட்டேன். உன்னோடு நான் உரையாடும் சத்தம்கூட அவர்களுக்குக் கேட்காது. நான் சொல்வது விளங்கியதா?
என்று கருவூரார் கேட்டார். சார்வாகன் சிறிது யோசித்தான். கருத்துச் சொல்ல வேண்டாம் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. ஆயினும் அவனது கட்டுப்பாட்டையும் மீறிச் சொற்கள் வெளிப்பட்டுவிட்டன.
எதற்கு இந்த மாயாஜாலமெல்லாம்? நான் உங்களுடன் இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறேன். உங்கள் ஆசிரமத்திலேயே அடைந்து கிடக்கவும் தயாராகத்தான் புறப்பட்டு வந்தேன். வலுக்கட்டாயமாக என்னை வெளியே அழைத்து வந்திருக்கவும் வேண்டாம்; இத்தகைய சாகசங்களை நிகழ்த்திக் காட்டவும் வேண்டாம்,
என்று அவன் சொன்னான்.
சித்தர் புன்னகை செய்தார்.
சாகசம் என்றா சொன்னாய்?











Add Comment