02. ஆதி மால்வேர்
பாப் தாமஸ். இவர்தான் இந்த அத்தியாயத்தின் நாயகன். முதல் மால்வேரை உருவாக்கியவர். மால்வேரை உருவாக்கியவர் எவ்வாறு நாயகனாக இருக்க இயலும்? வில்லன் என்றுதானே சொல்லவேண்டும்? அத்தியாயத்தைப் படியுங்கள். பதிலை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
இணையத்தின் மூதாதை ARPANET. இணையத்தின் வரலாறு இங்குதான் தொடங்கியது. மால்வேரின் வரலாறும் இங்குதான் தொடங்குகிறது. என்ன ஒரு முரண் பாருங்கள்! எது ஒரு கோணத்தில் மேடாகத் தெரிகிறதோ எதிர்க்கோணத்தில் அதுவே பள்ளம்.
பாப் ஒரு துருதுரு மாணவர். பள்ளி கல்லூரிகளில் முதல் ரேங்க் எடுப்பவர். அவருடைய சிறந்த கல்வியின் பயன், MITஇல் இடம் கிடைக்கிறது. அங்கிருந்து அவர் பணிக்குச் சேர்ந்த இடம் BBN என்றொரு நிறுவனம். இவர்கள் ஆர்பாநெட்டை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளனர்.











Add Comment