Home » உரி – 140
உரி நாள்தோறும்

உரி – 140

140. இடமும் இருப்பும்

மனிதச் சிந்தை செயல்பட இயலாமல் சில எல்லைகளில் முட்டிக்கொண்டு நின்று அலைபாய்வதை அச்சிந்தையினுள் இருந்தே இரண்டாம் தரப்பாக உற்று நோக்குவது எனக்குப் பழகியிருந்தது. சார்வாகனின் சிந்தையைக் கருதி, அதனுள் நிறைந்து அகழும்தோறும் இரண்டு விதமான அனுபவங்கள் நேரும். அவன் எண்ணங்களே இல்லாதிருப்பான். எத்தனை அலைந்து திரிந்தாலும் எதுவும் புலப்படாமல் திகைப்பேன். அல்லது இழுத்துக் கட்டிய நூலினைப் போல ஏதேனுமொன்றைக் கருதி, அதன் தொடக்கம் முதல் இறுதிவரை தடையற்றுச் சிந்தித்துக்கொண்டே செல்வான். எடுத்துக் கோத்துப் பொருள் கொள்வதே பெரும்பணியாக இருக்கும்.

ஆனால் அவனைத் தனது கருவியெனக் கருதும் வேட்டனின் சிந்தையில் இந்த இருமை நிலை இல்லை. சிந்தனை தடைபடும்போதெல்லாம் அவன் சோர்ந்துவிடுகிறான். விடை காணவியலாத வினாக்கள் அவனை அச்சமூட்டுகின்றன. ஆனால் பேசும்போது கவனமாகத் தனது அச்சத்தை மறைத்துக்கொள்ள விரும்புகிறான். மயூரமுகியின் எதிரில் அவனது சொற்கள் ஏந்தி வந்த நிதானம் நிகரற்றதாக இருந்தது. அச்சொற்களில் இருந்த தண்மை உண்மையிலேயே அவனது சிந்தையில் இல்லை என்பதைக் கண்டேன். தனது தவிப்பும் பதற்றமும் தனது தமக்கைக்குத் தென்பட்டுவிடலாகாது என்று நினைத்தான். ஆனால் அதற்கென்ன காரணம் என்று என்னால் கண்டறிய முடியவில்லை. எல்லா எண்ணங்களும் காரணத்தின் அடித்தளத்தில் மட்டுமே கட்டியெழுப்பப்படுவதில்லை போலிருக்கிறது.

இருந்துவிட்டுப் போகட்டும். மயூரமுகி அவனிடத்திலிருந்து விடைபெற்றுப புறப்படுவதற்கு முன்னர் அவன் சொன்னான்,

தமக்கையே, அவன் இன்னொரு தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறானென்று நீ நினைக்கிறாய். அதற்கு வாய்ப்பில்லை; நாமேதான் எங்கோ இடறுகிறோமென்று நான் நினைக்கிறேன். இவ்விரண்டு கருத்துகளையும் நாம் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும்வரை இச்சிக்கலுக்கு முடிவென்ற ஒன்று வராமலேதான் இருக்குமென்று தோன்றுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!