எல்லை என்றாலே தொல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இருக்கும் எல்லைகளைப் பார்த்தால் வியப்புதான் ஏற்படும். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே ‘இருக்கும்’ எல்லைகள் என்பதை விட ‘இல்லாத’ எல்லைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆம், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளைப் பிரித்துக் காட்டுவதற்குப் பயன்படுவதில்லை எல்லைகள். மாறாக, அவை இணைப்புப் பாலங்களாகச் செயல்படுகின்றன.
அதிலும் குறிப்பாக, Tripoint எனப்படும் மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் எல்லை முப்புள்ளிகள் பல இருக்கின்றன. பயணிகளை வெகுவாக ஈர்க்கும் சுற்றுலாத் தலங்கள் அவை. ஐரோப்பா முழுவதும் நாற்பத்தெட்டு ட்ரைபாயிண்ட்கள் உள்ளன.
அதில் இரண்டு முப்புள்ளி எல்லைத் தலங்களைக் காணும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.















Add Comment