கொத்துச்சாவி பத்திரம்
ஸ்மார்ட்ஃபோன்கள் கொரில்லா தாக்குதலுக்கு உள்ளாகலாம். அவற்றில் இருக்கும் தகவல்கள் களவு போகலாம். பணம் திருடப்படலாம். இப்படியெல்லாம் தொடர்ந்து வாசிக்கும்போது ஒருவிதமான பயம் வருவது இயல்பு.
அப்டின்னா இந்த ஃபோனே வேணாம்ப்பா… என்று கூட எண்ணத் தோன்றும். அப்படியெல்லாம் ஃபோனைத் துறந்துவிட முடியுமா என்று தெரியவில்லை. இன்றைய சூழலில் டிஜிட்டல் துறவு மிகவும் கடினம்.
அதற்கான தேவையும் இல்லை. பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தீர்வுகளும் இருக்கவே செய்கின்றன. நம் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணிகளை முறையாகப் பராமரித்தாலே போதும். பெரும்பாலான தொல்லைகளைத் தவிர்க்கலாம்.
சராசரிப் பயனாளராக ஒருவர் என்னவெல்லாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? குறிப்பாக, ஸ்மார்ட்ஃபோன்களை எவ்வாறு பேண வேண்டும் என்று இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.
பாதுகாப்பின் பாலபாடம் ஒன்றுள்ளது. அப்டேட் செய்வது. இதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது. இன்றைய சூழலில் பயனாளர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால் இது. அப்டேட் செய்ய விருப்பம்தான். ஆனாலும் ஒவ்வொரு அப்டேட்களும் சில ஜீபிகளாவது இருப்பதுதான் சிக்கல்.











Add Comment