Home » உரி – 139
உரி நாள்தோறும்

உரி – 139

139. படைவீடு

தெய்வங்களை எனக்குத் தெரியாது. தேவதைகளை நானறியேன். அற்புதங்களென்றும் அமானுடமென்றும் அதிசயமென்றும் மனிதர்கள் விவரித்துச் சிலிர்க்கும் எது ஒன்றும் என் ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. நான் ஆதிப் பெருந்தனிமத்தின் சிந்தையில் கருவிருக்கும் சொல். மனிதச் சிந்தை துழாவிப் பரவி நிறையும் எல்லைகளை நான் கவனிக்கிறேன். அது எட்டித் தொடும் இடம் பிரம்மத்தின் சிந்தையாக எப்போதேனும் நேரும். அப்போது நான் ஆர்வம் கொண்டு விழித்தெழுகிறேன். நெருங்கித் தொட முயலும் சிந்தை யாருடையதென்று அறிந்துகொள்கிறேன். இதுவே யுகத்துக்குச் சில முறை நிகழ்வதுதான். இவ்வெல்லையையும் கடந்து சார்வாகன், பிரம்மத்தின் சிந்தைக்குள் கருவிருக்கும் என்னைத் தீண்டப் பார்த்ததனால்தான் நான் அவனைக் கருதி அவனது சிந்தைக்குள் வந்து சேர்ந்தேன். அதனைத் தொட்டு எத்தனை எத்தனை சிந்தைகளை அளைய வேண்டியதாகிவிட்டது.

தெய்வத்தின் பதவிக் காலம் நிறைவடைந்து அது மீண்டும் பிறந்திருக்க வழியுண்டாவென வேட்டன் எறிபத்தன் மயூரமுகியிடம் கேட்டபோது உண்மையிலேயே நான் சிறிது திடுக்கிட்டுத்தான் போனேன். இந்த ஒற்றைப் புள்ளியில் அவன் நிலைகொண்டு எதுவும் நிரந்தரமல்ல என்பதைக் கருதி, தியானம் புரியத் தொடங்கியிருப்பானாகில், அவன் காலத்தின் சாட்சியங்களுள் ஒருவனாக நிலைபெற்றுவிட்டிருப்பான்.

இல்லை. அவன் தீவிரமாகவே அதனைத் தெரிந்துகொள்ள விரும்பியிருக்கிறான். தெய்வமாக இருப்பதென்பது ஒரு பதவி. அது ஓர் அதிகாரம். அதில் அமர்வோர் மாறலாம். மாறித்தான் தீர வேண்டும். புராணங்களில் எத்தனை எத்தனை இந்திரன்கள் மாறியிருக்கிறார்கள். நல்ல இந்திரன். கெட்ட இந்திரன். தவம் செய்யும் இந்திரன். தவறு செய்யும் இந்திரன். சாபமிடும் இந்திரன். சபிக்கப்படும் இந்திரன். மண்ணுக்கு மன்னர்களைப் போல விண்ணுக்குத் தெய்வங்கள். பெரிய தெய்வங்கள். உப தெய்வங்கள். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் வேறு வேறு தெய்வங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு பணி ஒதுக்கப்படுகிறது. ஊரைக் காக்க ஒன்று. உயிர்களைக் காக்க ஒன்று. பயிர்கள் விளைய ஒன்று. பணிகள் சிறக்க ஒன்று. ஆக்க ஒன்று. அழிக்க ஒன்று. காக்க ஒன்று. நீக்க ஒன்று. அற்பத் தேவைகளுக்கொன்று. அசகாயத் தேவைகளுக்கு ஒன்று.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!