அன்றும் இன்றும்
மால்வேர்களின் சித்து விளையாட்டுகளைத் தொடர்ந்து வாசித்து வரும் உங்களுக்கு ஓர் ஐயம் எழலாம். இதில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் முன்னெப்போதோ நடந்தவையாக உள்ளன. மால்வேர்களின் விளையாட்டுகள் இன்றும் சாத்தியமா?
அல்லது, ஆண்ட பரம்பரை என்று மட்டுமே மால்வேர்களால் மார்தட்டிக்கொள்ள இயலுமா? இன்று அவற்றின் ஆதிக்கம் முடிந்துவிட்டதா? இவ்வாறெல்லாம் வினாக்கள் எழுவது இயல்பு.
இவற்றுக்கான விடையை இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.
முதலில் இந்த ஐயம் ஏன் எழுகிறது?
மொபைல் ஃபோன்களை எடுத்துக்கொள்வோம். அவை தொடர்ந்து அப்டேட் ஆகின்றன. செக்யூரிட்டி அப்டேட்கள் வந்துகொண்டே உள்ளன. அப்படியானால் மால்வேர்கள் முடக்கப்பட்டிருக்க வேண்டுமே? இன்றும் எப்படி அவற்றால் செயல்பட முடிகிறது?











Add Comment