கடலோரத்தில் எழுந்த ஒரு நகரம். வானளாவிய கட்டடங்கள் வரிசையாக நிற்கின்றன. ஆனால் உள்ளே நுழைந்தால் மிஞ்சியிருப்பது வெறுமை மட்டுமே. தூசி படிந்த ஜன்னல்கள். ஆள் அரவமற்ற தெருக்கள். இதுதான் மலேசியாவின் ஃபாரெஸ்ட் சிட்டியின் தற்போதைய நிலை.
ஒருகாலத்தில் ‘ஏழு லட்சம் பேர் வாழும் கனவு நகரம்’ என்ற பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நூறு பில்லியன் டாலர் மெகா திட்டம். இன்றோ ‘பேய் நகரம்’ (Ghost City) எனப் பட்டப்பெயர் சூட்டப்பட்டு, வெற்று கூடுகளாகக் கட்டடங்கள் உயர்ந்து நிற்கின்றன. ஆனால் சமீபத்தில் இந்தப் பேய் நகரில் பேய்கள் மட்டும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பேயை விட ஆபத்தானவர்களான மோசடிக் கில்லாடிகளின் புகலிடமாகவும் மாறி இருக்கிறது பேய் நகரம்.
2006ஆம் ஆண்டு கருத்தாக்கம் செய்யப்பட்டு, 2016இல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாரெஸ்ட் சிட்டி, சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான Country Garden மற்றும் மலேசியாவின் ஜோஹோர் மாநில அரசுடன் தொடர்புடைய Esplanade Danga 88 நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவானது. மலேசிய மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தரும் இதில் ஒரு பங்குதாரர்.















Add Comment