சென்னை பரந்தூரில் கட்டப்படவிருந்த இரண்டாவது விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய விமான நிலையம் கட்ட வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் சென்னை மாநகரின் வர்த்தக மற்றும் விமானப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னை மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் விமான நிலையத்துக்கு அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவதாக ஒரு விமான நிலையம் அமைக்க கடந்த 2022ஆம் ஆண்டு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்தது.
ஆனால் பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்கள் தங்கள் நிலங்களை ஒப்படைக்க மாட்டோம் என்று கடந்த நான்கு வருடங்களாகப் போராடி வந்தனர். இந்தப் பகுதியில் விமான நிலையம் கட்டினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், மழைக்காலங்களில் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.















நடுநிலையான நம் குரல்
நான்கு வழிசாலைகள் எட்டு வழி சாலைகள் ஏன் சாதாரணமாக இரண்டு கிராமங்களுக்கிடையே சிறிய நடைபாதையை இணைப்புச் சாலையாக
மாற்ற்றினால் கூட விவசாய நிலத்தின் பகுதியளவு பாதிப்படையத்தான்
செய்யும். நல்ல விலையென்றால் விவசாலகிலத்தை கட்டிடம் தட்டுவதற்காக விற்கும் விவசாயிகளும் உள்ள நாடு. கையகப்படுத்திய
நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க முடியாத சூழ்நிலையில் தடைப்பட்ட
விவசாயம் திரும்ப வரல்லேபுவதில்லை. மக்கள் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்துதான் ஒரு கட்சி வேண்டாம் என்று வேறு கட்சிக்கு
வாய்ப்பு கொடுத்துள்ளனர். வீம்புக்கு எதையாவது செய்வதை விட்டு
ஆக்கபூர்வமாக யோசிப்பதே நல்லது.