Home » இன்றியமையா இட்லி
உணவு

இன்றியமையா இட்லி

அமெரிக்கன் சாப்ஸி, இத்தாலியன் பாஸ்தா என்றே ஜென் ஸீ, ஜென் ஆல்ஃபா தலைமுறைகள் உணவகத்தில் ஆர்டர் செய்யும். அந்நேரம் மெலிதான ஒரு குரல், ‘இட்லி இருக்காப்பா’ என்று கேட்டால் அவரே குடும்பத் தலைவர் என முடிவு செய்துவிடலாம். அவரைப் போலவே இட்லியும் ஆடம்பரம் இல்லா அழகைக் கொண்டது.

இட்லியை எதனுடன் எப்படிச் சாப்பிடுவது என்பது ருசிஞர்களுக்கே புரிந்த கலை. உடல் ஆற்றலுக்காக உண்பவர்களுக்கும் ஜென் தலைமுறைக்கும் இட்லி ஒரு சலிப்பூட்டும் அன்றாடம். அதன் அருமையைப் புரிய வைத்து, இட்லி என்ற மூன்றெழுத்து மகத்துவத்தை உணர்த்துவதே நமது நோக்கம்.

தோசையைப் போல யார் வேண்டுமானாலும் இட்லிக்கு மாவு அரைத்துவிட முடியாது. அதற்கென தனி கைப்பக்குவம் தேவை. அரிசியை முதலிலும், அரைப்பதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக உளுந்தையும் வெந்தயத்தையும் ஊற வைக்கவேண்டும். முதலில் உளுந்தைத்தான் அரைக்க வேண்டும். அதுவே இட்லிக்கு டீசர் போல இருக்கும். ஒரு விரலில் எடுத்து ஊதினால், உளுந்து மாவு வெட்கப்பட்டு நகர்ந்து செல்ல வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!