கடல் போக்குவரத்தில் மாற்று வழித்தடங்களை உருவாக்குவது குறித்து சீனா பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு வருகிறது. அதன் சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாக, ‘பனிப் பட்டுப் பாதை’ (Ice Silk Road) எனப்படும் ஆர்க்டிக் கடல்வழியை சீனா தேர்ந்தெடுத்துள்ளது.
பண்டைய காலத்தில் சீனாவையும் ஐரோப்பாவையும் இணைத்த வர்த்தகப் பாதை ‘பட்டுப் பாதை’ என அழைக்கப்பட்டது. அதேபோல், இப்போது வடக்குக் கடல் வழியாக சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்தப் புதிய பாதைக்கு ‘பனிப் பட்டுப் பாதை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மாற்று வர்த்தகப் பாதைகள் ஏன் தேவைப்படுகின்றன?
உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடங்களில் ஏதேனும் ஒன்று திடீரென முடங்கினால், அதன் தாக்கம் ஒரு நாட்டுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. எண்ணெய், எரிவாயு, உணவு, உரம், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் உலகளாவிய விநியோகமே பாதிக்கப்படலாம்.















Add Comment