இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை எதிர்த்துப் பல வருடங்கள் போரிட்டு வெற்றி பெற்றது ரஷ்யா. போரில் வெற்றியடைந்த மே ஒன்பதாம் தேதியை வெற்றி தினமாக ஒவ்வொரு வருடமும் ரஷ்யா கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. உலகப் போரில் இறந்த இருபத்தேழு மில்லியன் சோவியத் மக்களுள் இன்றைய ரஷ்யாவின் ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஒருவராவது இருப்பார்கள். இந்த நாளில் அவர்களது தியாகம் பெருமையோடும் நன்றியோடும் நினைவுகூரப்படுகிறது.
ரஷ்யாவின் வலிமையை உலகுக்கு உணர்த்தும் இந்தக் கொண்டாட்டங்கள் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறும். சர்வதேசத் தலைவர்கள் முன்னிலையில் ராணுவ அணிவகுப்புகள், நவீன ஆயுதங்களின் கண்காட்சி, அதிபரின் உரை என இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் வழக்கம். ஆனால் இவ்வருடம் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பயந்து இது சுருக்கப்பட்டது உலகளவில் ரஷ்யாவின் அந்தஸ்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இவ்வாண்டு குறைவான விருந்தினர்கள் முன்னிலையில் ராணுவ வீரர்களோடு இந்த விழா நடைபெற்றது. ஆனால் பீரங்கிகள், அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் என எந்த ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவில்லை. அலைப்பேசி, இணையத் தொடர்புகள் மாஸ்கோ நகரெங்கும் துண்டிக்கப்பட்டிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். சர்வதேசப் பத்திரிகையாளர்களின் அனுமதிகூட இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
















Add Comment