Home » பொறுத்தது போதும்
உலகம்

பொறுத்தது போதும்

அமெரிக்கா – இரான் போர்ச் சூழல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை தடுக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கும் தருணத்தில், OPEC மற்றும் OPEC+ அமைப்புகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் 2026 மே 1ஆம் தேதி முதல் விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த விலகலின் பின்னணி என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

முதலில் ஒபெக் பற்றித் தெரிந்துகொள்வோம். OPEC (The Organization of the Petroleum Exporting Countries) கூட்டமைப்பு 1960 செப்டம்பரில் இரான், இராக், குவைத், சவுதி அரேபியா, வெனிசுலா போன்ற உலகின் முக்கிய பெட்ரோலிய ஏற்றுமதியாளர்களால் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பு Texaco, Exxon, Mobil, Chevron, Gulf Oil, British Petroleum, Royal Dutch Shell போன்ற மேற்கத்தியப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்குச் செலுத்தப்படும் விலையை நிர்ணயித்தன. ஒபெக் இந்த ஆதிக்கத்தை எதிர்த்து தங்களது பெட்ரோலியத் தயாரிப்புகளுக்கு உரிய வருவாய் பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் பெட்ரோலியக் கொள்கைகளை சுயமாக உருவாக்கிச் செயல்பட்டு வருகிறது.

அரபு–இஸ்ரேல் மோதல்களின் விளைவாக, ஒபெக் அமைப்பு வெறும் வணிகக் கூட்டமைப்பாக மட்டுமல்லாது ஒரு பெரும் அரசியல் சக்தியாகவும் உருமாறியது. 1967இல் ஐக்கிய அரபு அமீரகம் இக்கூட்டணியில் இணைந்தது. படிப்படியாக அல்ஜீரியா, நைஜீரியா உள்பட மொத்தம் 12 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இணைந்தன. இன்று உலகின் மொத்தக் கச்சா எண்ணெய் உற்பத்தியில் சுமார் 50 சதவீதத்தை ஒபெக் கட்டுப்படுத்துகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!