நடந்த முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றது. இருந்தாலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்களுக்குப் பத்து தொகுதிகள் குறைவாகப் பெற்றது. அதற்கடுத்த இடங்களில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தமிழ்நாட்டில் தனித்து ஆட்சியமைக்கும் வலிமை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அதிகத் தொகுதிகளை வென்ற தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார். திமுக கூட்டணியில் இருந்து ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சியும் விஜய்க்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தது.
ஆனால் ஆளுநர், பெரும்பான்மைக்குத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தன்னிடம் நிரூபித்தால்தான் தவெகவை ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
















Add Comment