சுற்றிலும் வனவிலங்குகளின் சத்தங்கள், பாதையைக் காட்ட மறுக்கும் இருள், சிக்னல் இல்லாத செல்ஃபோனுடன் அடர்ந்த காட்டுக்குள் கையில் வெறும் 500 மி.லி. தண்ணீர் பாட்டிலுடன் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? இது ஒரு திகில் திரைப்படத்தின் காட்சியல்ல, ஓர் உண்மைச் சம்பவம்.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் அடர் வனப்பகுதியில் முப்பத்தாறு வயது மென்பொருள் பொறியாளர் சரண்யா ஜி.எஸ். எதிர்கொண்ட போராட்டம் இது.
2026 ஏப்ரல் 2 அன்று, கர்நாடகாவின் மிக உயர்ந்த சிகரமான தடியந்தமோல் (Tadiandamol) மலைப்பகுதியில் வழக்கமான மலையேற்றமாகத் தொடங்கிய ஒரு சாகசப் பயணம், சரண்யாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திகில் அனுபவத்தின் தொடக்கமாக மாறியது.















Add Comment