Home » உயரப்போகிறதா பெட்ரோல் விலை?
இந்தியா

உயரப்போகிறதா பெட்ரோல் விலை?

பெட்ரோல், டீசலின் விலை உயராது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இருந்தாலும், சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படலாம் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை நுகர்வோர்மீது சுமத்துமாறு இந்தியாவை IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் எரிபொருள் தேவை கட்டுப்படுத்தப்படும்; சந்தை மீண்டும் சமநிலைக்கு வரும் என்று வாதிடுகிறது அவ்வமைப்பு.

மத்தியக் கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதல்கள், இடையூறுகளுக்கு மத்தியிலும் பெட்ரோல், டீசல் விலைகள் இந்திய அரசாங்கத்தால் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்ற பொதுக்கருத்து நிலவி வந்தது. சட்டமன்றத் தேர்தல்கள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், வாகன எரிபொருள்களின் விலை உயர்த்தப்படப்போகின்றன என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. மறுபக்கம், அரசாங்கம் இத்தகைய ஊகங்களைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலைகளைச் செயற்கையாகக் குறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். ஒருவேளை மத்தியக் கிழக்கில் நிலவும் இடையூறுகள் பல மாதங்களுக்கு நீடித்தால். அரசாங்கம் இந்த நிலைப்பாட்டில் நீடிக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!