Home » உரி – 82
உரி நாள்தோறும்

உரி – 82

82. ஐப்பசி சதயம்

நான் சார்வாகனின் சிந்தையைக் கருதி, இடம் பெயர்ந்தபோது, கருவூர்ச் சித்தர் அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைக் கண்டேன். சார்வாகனும் அசைவறு மனத்தோடு உறங்கிக்கொண்டுதான் இருந்தான். இவன் மல்லனை அறிவானா? அவனது காதலியான மயூரத்தை அறிவானா? இவன் பொருட்டு அவன் உறக்கம் தொலைத்துத் தவித்துக்கொண்டிருப்பதை அறிவானா? இன்னும் சற்று நேரத்தில் நடுச்சாமமாகிவிடும். நிற்கவும் நடக்கவும் இயலாத கொடும்பனிக் காட்டில் அவன் தன்னை முற்றிலுமாக நிலத்துக்கடியில் புதைத்துக்கொண்டு தவமிருக்க முடிவு செய்திருப்பதை அறிவானா? அத்தவத்தின் காரணமே தான்தான் என்பதையாவது அறிவானா?

வாழ்க்கை மனிதர்களுக்கு விசித்திரமான அனுபவங்களைத் தருகிறது. அவை விசித்திரமானவை என்பதைச் சிந்தை உணர்வதற்கு முன்பே காட்சிகளைக் கலைத்துப் போட்டு இடம் மாற்றி வைத்துவிடுகிறது. விசித்திரங்கள் மின்னும் பூச்சிகளைப் போலத் தொலை தூரத்தில் மின்னி நகர்ந்துவிடுகின்றன. வாழ்ந்து கடந்ததைத்தான் கண்டு வியக்கிறோம் என்பதை அறியாமல் மனிதர்கள் மீண்டும் மீண்டும் விசித்திரங்களின் மாயப் பிடிக்குள் சிக்கி வாழ்ந்து தீர்க்கிறார்கள்.

எனக்கு இப்போது சார்வாகனைத் தெரியும் என்பது போலவே மாயமுனியைத் தெரியும். மல்லனைத் தெரியும். இம்மூவருக்கும் இடையில் உள்ள உறவற்ற உறவு தெரியும். சார்வாகனின் சிந்தைக்குள் வந்து செல்பவனாகவே இருந்தாலும் மல்லன் அவனைக் கண்டதில்லை. இவனுக்காகச் சிந்திக்கும் மாயமுனியை இவன் கண்டதில்லை. அவனுக்காகத் தவமிருக்கும் மல்லனை அவன் பெயரளவில் மட்டுமே அறிவான். இந்தப் புவியில் இதனினும் பெரிய விசித்திரம் இன்னொன்று இருக்க முடியுமா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!