பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் இருபத்தியொரு பட்டப்படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் / படித்து முடித்திருக்கும் அத்தனை மாணவர்களும் பேச்சற்றுப் போயிருக்கிறார்கள்.
கல்வி நிலையில், குறிப்பாக உயர்கல்வி, மக்களின் வாழ்வியல் திறன்களை வலுப்படுத்துவது, அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு உயர்கல்வி உறுதுணையாக இருப்பதோடு வாழ்க்கையில் உயர்நிலையை எட்டுவதற்கு அடித்தளமாகவும் அமைகிறது. நிறுவனங்களில் புதுமைகளையும், நேர்த்தியையும், மேலோங்கக் காண்பதே உயர்கல்வித்துறையின் தொலை நோக்கமாகும்.
தற்போதையப் பணிகள் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உயர்கல்வியில் பல்வேறு புதிய பட்டபடிப்புகளை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்து அதில் தேர்வாகிச் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் போது சில புதிய பட்டப்படிப்புகளைப் படித்தவர்களுடைய சான்றிதழ்களைச் சரி பார்ப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
Add Comment