பொன்னி நதி பாக்கணுமே…
இன்று ஊர் முழுக்கப் பாடிக்கொண்டிருப்பது இதைத்தான். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை; எழுதாத செய்தி இல்லை. சில நூறு பேர்கள் மட்டும் புழங்கும் இலக்கிய வட்டத்துக்குள் தெரிந்த பெயராக இருந்த இளங்கோ கிருஷ்ணனை இன்று தமிழகமே அறியும். ஆனால் கலெக்டர் ஆக ஆசைப்பட்ட இளங்கோ எப்படிக் கவிஞரானார் என்பது அந்தச் சிறிய வட்டத்தில்கூடப் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. காயசண்டிகை, வியனுலகு வதியும் பெருமலர், பட்சியன் சரிதம் போன்ற கவிதைத் தொகுப்புகளின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் அழுத்தமான தடம் பதித்திருக்கும் இளங்கோ கிருஷ்ணனை மெட்ராஸ் பேப்பருக்காகச் சந்தித்துப் பேசினோம்.
Wonderful. Great learnings from Ilango Krishnan’s Interview. Thanks RajShri!