Home » சேனல் செய்த மாயம்
ஆண்டறிக்கை

சேனல் செய்த மாயம்

வினுலா

இலக்கை முடிக்கும் வரை போராடுவது எனக்குப் பிடிக்கும். அதன் பின்னர் எதற்கும் அசையாமல் ஓய்வெடுப்பதும் பிடிக்கும். பார்பெக்யூ உணவகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்தையும் உண்பது, பின்பு வீட்டுக்குச் சென்று கண்களை மூடி தியான உலகுக்கு நிலைபெயர்வதை உதாரணமாகச் சொல்லலாம். எனது வேலைகளையும் எழுத்தையும் இதுபோலவே அணுகி வந்தேன். எனது தியானத்தைக் கலைத்து பல் துலக்குவது போல எழுத்தும் தினசரி கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் என்று நான் உணர்ந்த ஆண்டு இது.

ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறு, திட்டமிட்டு புத்தகங்களை வாசித்தல் என்ற இலக்குகளோடு தொடங்கியது இவ்வருடம். எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கட்டுரைகளில் தொடங்கிய வாசிப்பு புனைவு, அல்புனைவு எனத் தாவித்தாவி இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறேன். இலக்குகளில் சதமடிக்கவில்லை என்றாலும் இதற்கான பயணம் இருவேறு புதிய புத்தகங்களை எழுதி முடிக்க எனக்கு உதவியது.

மார்ச் மாத இறுதியில் எங்கள் எழுத்துக்களம் உருமாற வேண்டுமென்றார் ஆசிரியர். வாட்ஸப் சேனல் ஆரம்பிக்கச் சொல்லி நேரடியாக எடிட்டோரியல் மீட்டிங்கில் சொல்லியிருந்தார். அடுத்த வார மீட்டிங் வரை எனக்கு அது அசரீரியாக மட்டுமே கேட்டது. மீட்டிங் ஆரம்பிக்க சில மணிநேரம் முன்பு உதித்தது அந்த சதி யோசனை. உளவாளிகளின் உலகுக்குள் நுழைந்து பார்க்கலாம் எனத் தோன்றியது. அன்றே சேனலில் எழுதத் தொடங்கச் சொன்னார் ஆசிரியர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!