Home » இன்னும் எம்மை என்ன செய்யப் போகிறாய் அன்பே, அன்பே!
இந்தியா

இன்னும் எம்மை என்ன செய்யப் போகிறாய் அன்பே, அன்பே!

97 கோடி வாக்காளர்கள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிக நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்தியாவை ஆளப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது அடுத்த வாரம் இதே நாளில் தெரிந்திருக்கும்.

ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 என ஆறு கட்டங்களாக நடந்து முடிந்திருக்கிற தேர்தலில் 486 தொகுதிகளுக்கான வாக்கெடுப்பு நிறைவு பெற்றிருக்கிறது. இறுதிக்கட்டமாக ஜூன் ஒன்றாம் தேதி 57 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிஷா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலையும் நடத்தி முடித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் தகவலின்படி முதல் கட்டத்தில் 66.14 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 66.71%, 65.68%, 69.16%, 62.20%, 59.06% என அடுத்தடுத்த கட்டத் தேர்தலில் வாக்குகள் பதிவாகியிருந்தன. நான்காம் கட்டத்தில் அதிகபட்சமாகவும், ஆறாம் கட்டத்தில் குறைந்தபட்சமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன. சற்றேறக்குறைய 30 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது கடந்து போக வேண்டிய செய்தியல்ல. ஒரே ஒரு வாக்காளரானாலும் அவருடைய வாக்கைப் பெறப் பல மைல் தூரம் தேர்தல் அதிகாரிகள் நடந்து சென்று பதிவு செய்து வரும் செய்திகள் நம்பிக்கை தரும் வேளையில் இந்த வாக்கு சதவிகிதப் புள்ளி விவரங்கள் அயர்ச்சியை அளிக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!