சமையல் என்பது ஒரு கலை. நிறம், திடம், சுவை ஆகிய மூன்றையும் எப்படி மெருகேற்ற வேண்டும்? என்னென்ன பொடிகளை எப்போது கலக்க வேண்டும்? என்ன சேர்த்தால் என்ன கிடைக்கும்? எவ்வளவு சேர்க்க வேண்டும்? என்று பார்த்துப் பார்த்து வீடுகளில் பெண்கள் உருவாக்கும் மேஜிக்கல் போஷன் உணவு. முதலில் வீட்டு வாசல் வரை மட்டுமே மணந்த மணம் இப்போது உலகமெங்கும் யூடியூபால் மணக்கத் தொடங்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன்னால் வரை திருமணம் ஆவதற்கு முன் தாயிடம் சமையலைக் கற்றுக் கொள்வார்கள் பெண்கள். இப்போதெல்லாம் தாய் தந்தையர் வேறு ஊர்களில் இருக்கின்றனர், பிள்ளைகள் வேறு ஊர்களில் வேலை பார்க்கிறார்கள். இதனால் எந்தப் பாடத்தையும் அவர்கள் வழியாகப் பிள்ளைகள் கற்பது இல்லை. இந்தக் குறையைப் போக்கும் வேலையைத்தான் சமையல் வீடியோக்களைப் பதிவேற்றும் யூடியூபர்கள் செய்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
'பிள்ளைங்க ஒவ்வொருத்தரும் படிச்சு முடிச்சு ஒரு வேலைக்குப் போனதுக்கு அப்புறம்தான் அவங்களுக்குக் கல்யாணம்' என்பதில் மும்தாஜ் மிக உறுதியாக இருக்கிறார்.
2024ஆம் ஆண்டின் இறுதியில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து செய்யறிவுத்துறையில் இந்தியாவின் பங்கு குறித்தும், வாய்ப்புகள்...














இப்போது எக்கச்சக்க யூட்யூபர்கள் வந்துவிட்டனர். அம்மா கூட இருந்தாலும் யூட்யூபைப் பார்த்து சமைப்பது வழக்கமாகி வருகிறது. யூட்யூப் வீடியோ போடும் மனைவிக்காக கணவர் வேலையை விட்டது ஆச்சர்யமளிக்கிறது.
வீட்டில் வேலை செய்யும் பல பெண்களை அந்த அடையாளத்துடனேயே பிரபலப் படுத்திய பெருமை யூட்யூபையே சேரும்
good one.