30. களப் பணியாளர்
திலகரைப் பார்த்துப் பொதுச் சேவைக்கு வந்தவர் கோகலே. பின்னர் அவர் ஆகர்கரின் பக்கம் சாய்ந்திருந்தாலும், திலகர்மீது அவர் வைத்திருந்த மதிப்பு சிறிதும் குறையவில்லை.
அதனால், திலகர் DESலிருந்து விலகுவதாகத் தீர்மானித்தபோது கோகலே மிகவும் வருந்தினார். தன்னால்தான் திலகர் இப்படி ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டாரோ என்று அவருக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. அதனால், திலகரின் மனத்தை மாற்றுவதற்காகத் தானே DESலிருந்து வெளியேற முன்வந்தார்.
ஆனால், கோகலேவின் விலகல் கடிதத்தை DES ஏற்றுக்கொள்ளவில்லை, ‘திலகர் வெளியேறுவதற்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் தொடர்ந்து வாழ்நாள் உறுப்பினராக இருக்கலாம்’ என்று சொல்லிவிட்டார்கள்.










Add Comment