29. தீர்மானக் குழப்பங்கள்
1888ம் ஆண்டு, கோகலே சார்வஜனிக் சபாவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருபத்திரண்டு வயது இளைஞர் ஒருவர் தான் வாழும் நகரத்தின் முதன்மையான மக்கள் அமைப்புகளில் ஒன்றின் செயலாளராகப் பொறுப்பேற்பது மிகப் பெரிய பெருமை. குறிப்பாக, ரானடேவின் வழிகாட்டுதலில் இயங்குகின்ற ஓர் அமைப்புக்கு அவர் செயலாளராகிறார் என்றால், அவருடைய திறமையும் பணி ஒழுக்கமும் மிகச் சிறப்பானவை, உலகத்தரத்திலானவை என்று பொருள்.
ஆனால், இந்தப் பெருமைக்குரிய பொறுப்பைக் கோகலே உடனடியாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனெனில், அவர் சார்வஜனிக் சபாவின் செயலாளராவது திலகருக்குப் பிடிக்கவில்லை. இது அவருடைய ஆசிரியப் பணியை, டெக்கான் கல்விக் கழகத்துக்கான சேவைகளைப் பாதிக்கும் என்று திலகர் நினைத்தார்.










Add Comment