’உயர்ந்தவை எல்லாம் ஒரு கட்டத்தில் வீழ்ச்சி பெறும்’ என்பது மனித நாகரிகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. செயற்கை நுண்ணறிவு கண்டறியப்பட்டு, பரவலாகப் பயன்படுத்தப்பட ஆரம்பித்த நாளிலிருந்தே வல்லுநர்கள் பெரும்பாலோர் சொல்வதும் அதுவே. இதுஒரு உச்சத்திற்குச் சென்று மீண்டும் வீழும் என்பதுதான். ’AI Winter’ என்பது உலகளாவிய சங்கேதப்பெயர் அதற்கு.
2023-ல் செயற்கை நுண்ணறிவின் கரங்கள் பல்கிப்பெருகி எல்லாத் துறைகளிலும் ஆழ வேர்கொள்ள ஆரம்பித்தபிறகு சந்தேகங்களும், பயமும், ஆற்றாமையும் கலந்து ’எங்கே செல்லும் எந்தப்பாதை’ என்ற கலவையான உணர்வுகளோடேயே உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. இப்போது வல்லுநர்கள் ஆதாரங்களுடன், ‘2024-ல் செயற்கை நுண்ணறிவிற்கு ஊழிக்காலம் நிச்சயம்’ என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்
Add Comment