விஸ்வரூபம்
‘ரன் அரவுண்ட்’ என்றொரு சிறுகதை. ஐசக் அஸிமோவ் எழுதியது. இக்கதை 1942-இல் வெளியானது. இதில்தான் முதன்முறையாக “ரோபாட்டிக்ஸ் விதிகள்” மூன்றினை வரையறை செய்திருந்தார் அஸிமோவ்.
• முதலாம் விதி: தன் செயலாலோ, செயலின்மையாலோ, ரோபாட் ஒருபோதும் மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது.
• விதி இரண்டு: எந்தவொரு ரோபாட்டும் மனிதன் இடும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அக்கட்டளை முதலாம் விதியை மீறும்படி இருக்குமாயின் நிறைவேற்றக்கூடாது.
• விதி மூன்று: மேற்கூறிய இரண்டு விதிகளையும் மீறாமல், ஒரு ரோபாட் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
இந்த மூன்று விதிகளை வைத்துக்கொண்டு, எண்ணற்ற அறிவியல் புனைவுகள் வந்துள்ளன. சினிமாக்காரர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? அவர்களும் கலர் கலராகக் கதை சொல்லியிருக்கிறார்கள்.
Add Comment