அந்த நாளும் வந்திடாதோ
“அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல் வடிவம்தான், ஏ.ஐயைப் பொதுஜனங்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. சகமனிதர் ஒருவரிடம் பேசுவதுபோலவே ஏ.ஐயிடம் பேசமுடிவது தான் இவ்வெற்றிக்குக் காரணம்.
சமீபத்தில் ‘ஓப்பன் ஏ.ஐ.’ சார்பாக, ‘இனி என்ன நடக்கும்?’ என்றொரு திட்டம் வெளியாகியுள்ளது. இதில் அவர்கள் ஏ.ஐ.யின் ஐந்து வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வைந்து படிகளையும் கடக்கும் போது, நம்மிடம் ஏ.ஜி.ஐ. இருக்கும் என்கிறார்கள்.
“அதென்ன ஏ.ஜி.ஐ…?” ஆர்ட்டிஃபீசியல் ஜென்ரல் இண்டெலிஜென்ஸ். மனித ஆற்றலுக்கு நிகரான அல்லது அதைவிட மேலான துல்லியத்துடன் செயல்படும் ஏ.ஐ.. இந்த ஆற்றல் ஒரு துறை சார்ந்து மட்டுமே இல்லாது, பொதுவானதாக இருக்கும்.
Add Comment