விளங்க முடியா கவிதை நான்
எந்தவொரு உயர் தொழில்நுட்பமும் இரட்டை முகங்களைக் கொண்டது. அதன் ஒரு முகம் எளிமை. மற்றொன்று சிக்கலான அறிவியல் முகம். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு எளிமைதான் அதன் பரவலாக்கத்திற்கான முக்கியமான காரணம்.
உதாரணமாக, ஸ்மார்ட் ஃபோனை எடுத்துக்கொள்வோம். அது எப்படி வேலை செய்கிறது என்று பயன்படுத்தும் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பேர்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த அறியாமை அதைப் பயன்படுத்த எவ்விதத்திலும் தடையாக இருப்பதில்லை. ஸ்மார்ட் ஃபோன்தான் என்றில்லை, நாம் இன்று பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளுக்கும் இது பொருந்தும்.
செயற்கை நுண்ணறிவும் இந்த விதிக்குட்பட்டதுதான். ஆனால் இங்கு கூடுதலாக ஒரு சிக்கல் உள்ளது. ஸ்மார்ட் ஃபோன் எவ்வாறு வேலை செய்கிறது என்று ஒரு சராசரிப் பயனாளருக்குத் தெரியாது ஆனால் அதை உருவாக்கிய நிறுவனத்திற்குச் சர்வநிச்சயமாகத் தெரியும். ஏ.ஐ. விசயத்தில் இங்குதான் பிரச்னை.
Add Comment