அயோத்தி எப்படி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உரிமை கொண்டாடும் கலவர பூமியாக இருக்கிறதோ, காஷ்மீர் எப்படி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே தீராப்பிரச்னையாக இருக்கிறதோ/ இருந்ததோ அதேபோல ஜெருசலமும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தினியாவிற்கும் இடையே ஒரு தலைவலி. மதங்களால் அன்பு பரவுகிறதோ இல்லையோ, மத நிறுவனங்களால் நிச்சயம் பிரிவினையும் வன்முறையும் பரவுகிறது. தேவகுமாரர்கள் அவதாரங்களில் இருந்து அருள் மொழியையும் அன்பையும் கற்றுக்கொண்டோமோ இல்லையோ, அவர்கள் அவதார இடத்தை ஆராதிக்கிறோம், உரிமை கொண்டாடுகிறோம், அந்த உரிமையைத் தக்க வைப்பதில் குறையேதும் வைப்பதில்லை.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment