அந்த ஏழு மாதங்கள்
நான் யார்? தன்னை அறியும் வேட்கையுள்ளவர்களின் முதன்மையான கேள்வி. இரண்டே சொற்கள். ஆயினும் மனிதகுலம் பன்னெடுங்காலமாக விடை தேடித் திரியும் வினா.
பத்தொன்பது வயது ஸ்டீவ் ஜாப்ஸ் மனத்திலும் அதே கேள்வி. அவரை உறங்க விடாது துரத்திக்கொண்டிருந்தது. ஒரு சிறுபொறியாகத் தான் தோன்றியது. நாள்கள் செல்லச் செல்ல அக்னிக்குஞ்சு பெருந்தீயாக விஸ்வரூபமெடுத்தது. பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறந்து இந்தியாவுக்கு அழைத்து வந்தது அத்தேடல்.
ஏப்ரல் மாத வெயில். புதுதில்லியின் புழுக்கம் ஜாப்ஸ் எதிர்பாராத அளவில் இருந்தது. நண்பர்கள் பரிந்துரைத்திருந்த ஹோட்டலில் இடம் கிடைக்கவில்லை. டாக்ஸி டிரைவரை நம்பி வேறோர் இடத்தில் தங்கினார். அங்கிருந்த நீரும் உணவும் அவருக்கு ஒத்துவரவில்லை. கடுமையான காய்ச்சல். உடல் எடை சரசரவெனக் குறைந்தது. தனது கேள்விக்கான பதில் புதுதில்லியில் இல்லை என்பது ஜாப்ஸுக்குத் தெரியும். அவரது பயணத்தின் அடுத்த இலக்கு நைனிதால்.















Add Comment