மிதக்கும் ஜன்னல்கள்
அதிகாலை இரண்டு மணி.
டெலிஃபோன் ஒலிக்கிறது. நல்ல தூக்கத்திலிருந்த டெஸ்லர் கண்விழிக்கிறார். ரிசீவரை எடுக்கிறார்.
மறுமுனையில் ஜாப்ஸ்.
‘இன்டர்ஃபேஸில் இதையும் சேர்க்கமுடியுமா?’ என எதையோ கேட்கிறார் ஜாப்ஸ். அவரது குரலைக் கேட்டதும் எழுந்து அமர்ந்துகொள்கிறார் டெஸ்லர்.
அதன் பின்னர் நீண்டநேரம் இருவரும் பேசுகின்றனர்.
இவ்வாறு நடப்பது இது முதல்முறை அல்ல. ஜாப்ஸின் நடுநிசி அழைப்புகள் டெஸ்லருக்குப் பழகிப்போயிருந்தன. ஒருவகையில் அவருக்கு அது பிடிக்கவும் செய்தது.
அது சரி, யாரிந்த டெஸ்லர்? சென்ற அத்தியாயத்திலேயே இவர் தலைகாட்டியிருக்கிறார். ஜெராக்ஸ் நிறுவனப் பொறியாளர். இருந்துவிட்டுப் போகட்டும். அவரை ஏன் ஜாப்ஸ் அழைக்கிறார்?














Add Comment