Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 23
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 23

கட்டுப்பாடு

ஜாப்ஸின் முன்பு ஒரு பார்சல். ஃபெட்-எக்ஸ் கொரியர் மூலம் வந்திருந்தது. அதையே சில நொடிகள் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் அதைக் கவனமாகத் திறந்தார்.

அதனுள்ளே டைம் பத்திரிகையின் சில பிரதிகள். ஜாப்ஸின் கண்கள் அப்பத்திரிகையின் அட்டையில் எதையோ தேடின.

அவர் தேடியது அங்கில்லை. ஆனால் அங்கிருந்ததும் ஜாப்ஸுக்கு நெருக்கமானதுதான்.

1982ஆம் ஆண்டின் இறுதி. டைம் பத்திரிகை நிருபர் ஒருவர் ஜாப்ஸை நேர்காணல் செய்ய வந்தார். அவரது பெயர் மைக்கேல் மோரிட்ஸ். அவருக்கும் ஜாப்ஸுக்கும் ஒரே வயது. சகஜமாகப் பேசினார்.

தன் சகாக்களிடம் மோரிட்ஸை ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். அவர் கேட்கும் தகவல்களை வழங்குமாறு அறிவுறுத்தினார். அவரும் ஒவ்வொருவராகப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார்.

நேர்காணல்கள் சுமுகமாக முடிந்தன. இந்த ஆண்டின் நாயகன் என்று தன்னை டைம் பத்திரிகை அறிவிக்கும் என்று திடமாக நம்பினார் ஜாப்ஸ்.

அவரது முகம் பத்திரிகையின் அட்டைப்படமாக வருமென்று காத்திருந்தார். இருபத்தேழு வயதே ஆன ஜாப்ஸுக்கு இது ஒரு முக்கியமான மைல்கல் என்றே தோன்றியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!