Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 25
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 25

திருவிழா

ஜனவரி 24, 1984.

அரங்கம் நிறைந்திருந்தது. இரண்டாயிரத்து அறுநூறு பேர் தாங்கொணா ஆர்வத்துடன் அமர்ந்திருந்தனர். மேக் அறிமுக விழா. இது ஓர் ஆப்பிள் திருவிழா.

அறிமுக விழாவுக்கு முன்னரே ஆப்பிள் சில சித்து வேலைகளைச் செய்திருந்தது. ஒரு டிவி விளம்பரம். சில பத்திரிகைப் பேட்டிகள்.

திரைப்படம் வருவதற்கு முன்பே பாடல்கள் வந்து எதிர்பார்ப்பைக் கூட்டுவது போல, மேக் கணினியைக் காண ஆப்பிள் ஆர்வலர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

இந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கு ஆப்பிள் என்னும் தேரைப் பலரும் வடம்பிடித்து இழுத்துள்ளனர். ஜாப்ஸ் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை இதில் பங்கு உண்டு.

ஆனபோதும், ஒருவர் மட்டும் ஸ்பெஷல். ஜான் ஸ்கெல்லி. ஜாப்ஸ் வேண்டி விரும்பி ஆப்பிளுக்கு அழைத்து வந்த நபர்.

ஸ்கெல்லி, பெப்ஸி கோலாவின் பிரசிடெண்ட். பெப்சியின் விளம்பரங்கள் கோலோச்சிய காலமது. அதில் ஸ்கெல்லியின் பங்கு மிக அதிகம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!