Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 24
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 24

டிஜிட்டல் தொழில் முனைவோர்

மீராவுக்கு மிகப் பிடித்த விஷயம் ஷாப்பிங் செய்வது. காஸ்ட்லியான கடைகளில் நாசூக்காக வாங்குவதைக் காட்டிலும், சிறுசிறு கடைகளுக்குச் சென்று அங்கே குவிந்திருக்கும் பொருள்களிலிருந்து கியூட்டான ஒரு ஐட்டத்தைத் தேடிப் பிடித்து வாங்குவது அவளது வழக்கம்.

ஒருமுறை அப்படி வாங்குவதைத் தோழியின் உதவியுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்டாள். இந்தக் கடை எங்கே இருக்கிறது? இந்த க்ளிப் என்ன விலை? என்று கமெண்ட்டில் வந்த கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொன்னாள்.

பிறகு ஒவ்வொரு முறை ஷாப்பிங் போகும்போதும் கடையின் பெயர், இருக்குமிடம், பொருளின் விலை போன்றவற்றைச் சொல்லி வீடியோ போடத் தொடங்கினாள்.

பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மளமளவெனப் பத்தாயிரத்தைத் தொட்டது. ‘எங்கள் கடைக்கு வந்து வீடியோ போடுங்கள், எங்கள் பிராண்ட் ஃபேஸ்வாஷைப் புரமோட் செய்யுங்கள்’ என்பது போன்ற வணிக அழைப்புகள் வரத் தொடங்கின. அலுவலகத்தில் கிடைக்கும் சம்பளத்தைக் காட்டிலும் இதில் கூடுதல் வருமானம் கிடைத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!