ஆப்பிளும் பில் கேட்ஸும்
பில் கேட்ஸ் பிறந்த ஆண்டு 1955. ஜாப்ஸ் பிறந்ததும் அதே வருடம்தான். இருவருக்கும் பொதுவான ஒன்று ‘ஆர்வம்’. எதையாவது செய்யத் துடிக்கும் ஆற்றல்.
ஜாப்ஸின் இளமைக் காலத்தைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். கேட்ஸின் இளமைக் காலம் இதற்கு முற்றிலும் மாறானது.
கேட்ஸின் தந்தை புகழ்மிக்க வழக்கறிஞர். தாயும் பல்வேறு சமூகப் பணிகள் ஆற்றிப் பிரபலமாக இருந்தவர்.
ஜாப்ஸும் வாஸும் சேர்ந்து டெலிஃபோன் நெட்வொர்க்கை ஹேக் செய்த கதையைப் பார்த்தோம். புளூ பாக்ஸ்தான் அவர்களது முதல் புராஜெக்ட்.
கேட்ஸுக்குக் கம்ப்யூட்டர்கள் அறிமுகமானது பள்ளியில். அவர் படித்தது ஒரு வசதியான தனியார் பள்ளி. அங்கிருந்த கம்ப்யூட்டரில் வகுப்புகளுக்கான டைம்டேபிள் போடும் நிரலொன்றை எழுதினார். ஆசிரியர்களுக்குப் பிடித்த சமத்துப் பிள்ளை.
அதற்குப் பின் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து பாதியிலேயே வெளியேறுகிறார். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஏதோ ஒரு மடத்தையும் துறவிகளையும் தேடிச் செல்லவில்லை. அவருக்கென்று ஒரு திட்டம் இருந்தது.
நிற்க. இப்போது ஏன் இந்த ஒப்பீடு? ஜாப்ஸும் கேட்ஸும் இணைந்து பணியாற்றிய தருணங்களும் உண்டு. அவற்றைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.














Add Comment