26 – கண்ணாடிக் கூண்டுகள்
22-ஜூன், 2003.
டிவிஎஸ் எனும் ரஷ்யத் தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. திடீரென்று ‘டிவிஎஸ் உங்களிடமிருந்து விடைபெறுகிறது. எங்கள் ஒளிபரப்பு சேவை இனி தொடராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்ற அறிவிப்பு திரை முழுக்கக் கொட்டை எழுத்தில் வெளியானது.
சில நிமிடங்களில் அடுத்த அறிவிப்பு வெளியானது. ‘ரஷ்யர்களின் உடல் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதே எங்கள் நோக்கம்’ என்றபடி அரசாங்கத்தின் புதிய விளையாட்டு சேனல் ஒன்று ஒளிபரப்பானது. சர்வ சாதாரணமாக ஒரு சேனல் இழுத்து மூடப்பட்டிருந்தது.
அரசாங்கம், ஆலிகார்க்குகள் என யாரையும் சார்ந்திராமல் ஒரு வருடமாகச் செயல்பட்டு வந்தது டிவிஎஸ் நிறுவனம். நிதி நெருக்கடி, மாதக்கணக்கில் சம்பள பாக்கி, ஒளிபரப்புச் சேவைக்கான கட்டண பாக்கி போன்ற காரணங்களால் மூடப்பட்டது என்றார்கள். ஏற்கெனவே என்டிவி, டிவி-6 போன்ற சேனல்கள் மூடப்பட்டபோது சொல்லப்பட்ட அதே காரணங்கள். நேர்மையுடன் செயல்பட்ட கடைசி தனியார் தொலைக்காட்சி என்ற பெருமையுடன் டிவிஎஸ் அன்று ஊடகத் துறையிலிருந்து வெளியேறியது.















Add Comment