அடுத்து…
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் என்று வாழ்பவரல்ல ஜாப்ஸ். மேக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் விலக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அலங்காரமான பதவி ஒன்றை அவருக்குக் கொடுத்திருந்தனர். உலகெங்கும் சுற்றலாம். ஆப்பிள் சார்பாக ரஷ்யாவுக்குச் சென்றார் ஜாப்ஸ்.
அங்கும் சில பிரச்சினைகள். சிலர் குறித்துப் பேசக்கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. கேட்பவரா அவர்? தான் சென்ற பல்கலைக்கழகங்களில் எல்லாம் விருப்பம் போலப் பேசினார்.
எவருடைய அதிகாரமும் அவரைக் கட்டுப்படுத்தவில்லை.
திரும்பி வந்த பின் வெறுமையாக இருப்பதாக உணர்ந்தார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் அவருக்கொரு நண்பர். பால் பெர்க். உயிரி வேதியியல் நிபுணர்.
அவரிடம் பேசினார். அப்போது ஜாப்ஸுக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.














Add Comment