கடை விரித்தேன்
ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷன் தயாராகிக்கொண்டிருந்தது. யூஸர் இண்டர்ஃபேஸ் டீமை ஜாப்ஸ் மாற்றியமைக்கத் திட்டமிட்டார். அதற்கென அவரே இன்டர்வியூக்களை நடத்தினார். அதிலொரு சுவாரசியமான இன்டர்வியூ குறித்துப் பார்ப்போம்.
ஜாப்ஸ் நடத்தும் இன்டர்வியூக்கள் தனித்துவமானவை. வழக்கமான மனிதவள வல்லுநர்களைக் கேட்டால் இது தவறான முறை என்பார்கள். நாம் மீண்டும் மீண்டும் பார்த்துவருவது போல, ஜாப்ஸின் உலகில் சராசரி விதிகள் இல்லை.
திறமையான மனிதர்களைக் கண்டறியும் வல்லமை பெற்றவராக இருந்தார் ஜாப்ஸ்.
அன்றைக்கு நேர்காணலுக்கு வந்திருந்தவரின் வயது முப்பதுக்குள் இருக்கும். கொஞ்சம் பரபரப்பாக இருந்தார். அவர் குரலிலும் நடுக்கம் தெரிந்தது.
ஜாப்ஸ் அதிரடியாகச் சில கேள்விகளைக் கேட்டார். வந்திருந்த இளைஞரால் அக்கேள்விகளுக்குச் சரியாக விடையளிக்க இயலவில்லை.















Add Comment