இசை
‘டாப் 100’ என்றொரு திட்டம். ஜாப்ஸ் ஆண்டுதோறும் இதை விமரிசையாக நடத்திவந்தார். ஆப்பிள் பணியாளர்களில் ஆகச் சிறந்த நூறு பேரைத் தேர்ந்தெடுப்பார்.
அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு எங்கேனும் சென்றுவிடுவார். அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்பார். ‘அடுத்தாண்டு நாம் செய்ய வேண்டிய பத்து விஷயங்கள் யாவை?’
நீண்ட நெடிய விவாதங்கள் நடக்கும். எந்தவொரு பிரசன்டேஷனும் கிடையாது. ஒய்ட்போர்ட் மட்டும்தான். விதவிதமாகச் சிந்தித்துப் பத்து சங்கதிகளைப் பட்டியலிடுவார். இது அவர் அழைத்துச் சென்ற திறமைவாய்ந்த நூறு நபர்களின் யோசனைகளின் அடிப்படையில் தயாரான பட்டியல்.
பட்டியலில் முதல் மூன்றை மட்டும் தேர்ந்தெடுப்பார். இவையே நமது அடுத்த ஆண்டின் நோக்கங்கள் என்று அறிவிப்பார்.















Add Comment