பாடம்
ஆப்பிள் செய்த அனைத்துமே வெற்றியா என்றால் இல்லை. அவர்கள் முனைந்து செய்து, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத திட்டங்களும் உண்டு.
அவற்றுள் ஒன்றுதான் க்யூப். இது செல்லப் பெயர். ஆப்பிள் அதற்கு வைத்த முழுப்பெயர் ‘பவர் மேக் ஜி4 க்யூப்’. இப்படியொரு நாமகரணம் செய்ய ஜாப்ஸ் எப்படிச் சம்மதித்தார் என்று தெரியவில்லை.
இரண்டாயிரமாவது ஆண்டில் இக்கணினி வெளிவந்தது. மேற்கொண்டு வாசிப்பதற்கு முன் இணையத்தில் இந்தப் பெயரைப் போட்டுத் தேடிப்பார்த்துவிடுங்கள்.
ஆப்பிளின் அழகான கருவிகள் என்று பட்டியலிட்டால் நிச்சயம் க்யூப் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். முதல் பார்வையில் கணினி என்றே சொல்ல இயலாது.
எட்டு இன்ச் நீள, அகல, உயரத்தில் ஒரு கனச்சதுரம். ஒரு பெர்ஃபெக்ட் க்யூப். அதுவும் கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் ட்ரான்ஸ்பாரண்ட் டிசைன்.
ஆப்பிள் தயாரிப்புகள் அனைத்திலுமே மினிமலிசம் உண்டு. ஆனால் இதில் வழக்கத்தை விட அதிகம்.















Add Comment