இந்தியாவில் தற்போது பிரபலமாகப் பேசப்படுபவர்களில் ஒருவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தேடு பொறி பெர்பிளக்ஸிட்டி (Perplexity) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.
முப்பதொரு வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்பிளக்ஸிட்டியின் நிறுவனர். சென்னையைச் சேர்ந்த தமிழர். கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற வலிமையான தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டியிட்டு பெர்பிளக்ஸிட்டி நிறுவனத்தை உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கியிருக்கிறார்.
அரவிந்த் 1994ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். அவருடைய தந்தை ஸ்ரீனிவாஸ் ஒரு பட்டயக் கணக்காளர். தாய் ராதா மத்திய அரசு ஊழியர். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த தங்கள் மகனுக்குச் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பது அவருடைய பெற்றோர்களின் விருப்பமாக இருந்துள்ளது. அதற்கேற்ப அரவிந்தும் நன்றாகப் படித்துள்ளார். கணித ஒலிம்பியாட்டில் விருது பெற்றிருக்கிறார். மத்திய அரசு உதவித்தொகைகள் பெற்றிருக்கிறார்.















Add Comment