Home » வசந்தி தேவி: போராளிப் பேராசிரியர்
ஆளுமை

வசந்தி தேவி: போராளிப் பேராசிரியர்

வசந்தி தேவி

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் விசிக வேட்பாளராக வசந்தி தேவி களமிறக்கப்பட்டார். அங்கு நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் ‘இந்தத் தேர்தலில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்திலிருக்கிறோம். அதில் தலைசிறந்த வேட்பாளர் அம்மா வசந்தி தேவிதான்’ என்றார்.

திருமாவளவன் சொன்ன அந்தப் பட்டியலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், ஏன் திருமாவளவனும் கூட இருந்தனர். முதல்வர் வேட்பாளர்கள் இருந்த பட்டியலில் வசந்தி தேவியை முதலாவதாக வைத்தது எது?

கல்வியாளர், செயற்பாட்டாளர், பேராசிரியர், துணைவேந்தர், மாநில மகளிர் ஆணையத் தலைவர், அரசியல்வாதி எனப் பல்வேறு அடையாளங்களைச் சொந்தக்காரர் வசந்தி தேவி. சேவையும், போராட்ட குணமுமே அவரின் நிலைத்த அடையாளங்களாக இன்று வரை மிளிர்கின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொரு சமூகப் பிரச்சனைக்காகப் போராடியிருக்கிறார். புதிய பொறுப்புகள் கிடைத்தபோது அவற்றில் புரட்சிகளைச் செய்திருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!