தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பனிக்காலம் தொடங்கியது போல இருந்தது. அதற்குள் கோடைக்காலம் வந்துவிட்டது. பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்து நம் உடலெல்லாம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த அதீத வெயிலின் தாக்கம் உடல்ரீதியான பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன. ஆகையால்...
Author - பாபுராஜ் நெப்போலியன்
நாடு முழுவதும் இன்புளூயன்சா ‘ஏ’ வைரஸ் தொற்றின் காரணமாக இருமலுடன் கூடிய காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இரண்டு உயிர் இழப்புகள் இதனால் நிகழ்ந்திருக்கிறது. இதன் பொருட்டுத் தமிழகத்தில் மார்ச் பத்தாம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்புக் காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாகச் சுகாதாரத் துறை...
அது திருமலை நாயக்க மன்னர் வாழ்வின் இறுதிக் காலக்கட்டம் . மதுரையில் சைவ வைணவ சாதிப் போராட்டங்கள் ஒரு புறமும், மத போராட்டங்கள் மற்றொரு புறமும் தீவிரமாக இருந்தன. போராட்டங்கள் தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சி தடைப்படும் என்ற அச்சம் நாயக்கர் மனத்தில் இருந்தது. ஆட்சி பலவீனமாக மாறும்படி விடக்கூடாது என்று...
ஒரு நாட்டில் ஜனநாயக ஆட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ, கொடுங்கோல் ஆட்சியோ நடக்கலாம். ஆனால், அந்த நாட்டினை நிர்வகிக்க, குழப்ப நிலையிலிருந்து மீட்க, இறைமை அதிகாரத்தை வரையறுக்க, நிகழ்கால மற்றும் வருங்காலச் சந்ததிகளின் விருப்பு, வெறுப்புக்களைக் கட்டுப்படுத்த தேவை.. அரசியலமைப்பு. அரசியலமைப்பின்றி ஆட்சி...
அரசு வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. சில ஆயிரம் வேலைகளுக்குப் பல லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் இதில் வெற்றி பெறுவது எளிதான காரியமன்று. சரியான திட்டமிடல், தொடர் பயிற்சி, தேர்வு தவிர வேறு சிந்தனையன்றி உழைத்தால் பலனுண்டு. தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் தினமும்...
பெண்கள் மனத்தைப் பல ரசனைகள் ஒவ்வொரு காலத்திலும் பல திசைகளிலிருந்து ஆக்ரமித்துக் கொண்டாலும் ஒரு விஷயம் என்றென்றும் அவர்கள் மனத்திற்கு மிக அணுக்கமாக இருக்கிறது. அந்த ஒன்று- பூக்கள். அதிலும் மல்லிகைப்பூவிடம் பெண்களுக்கு இருக்கும் பிரியம் அலாதியானது. மல்லிகைப்பூ வகைகளில் மிகப் புகழ்பெற்றது ‘மதுரை...
தென்னிந்தியாவில் திருத்தலத் தொடர்புடைய தெப்பக்குளங்கள் பல உள்ளன. அவற்றில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடித் தெப்பக்குளம் மிகப்பெரியது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘மதுரை வண்டியூர் தெப்பக்குளம்’. மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் இதை அழைப்பர். சதுர...
ஜல்லிக்கட்டு தமிழர் மரபில் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஒன்று. இது ஒரு திருவிழாவைப் போல ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி தென் தமிழக மாவட்டங்களில் நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த...
நமது மெட்ராஸ் பேப்பரின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர், செல்வ முரளி. இவர் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை சந்தித்து உரையாடியது ஊடகங்களில் பேசு பொருளானது . ஊடகங்களில் சிலர் இவரைக் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று...
புத்தகம் இசை ஆன்மிகம். சிறு வயதிலிருந்து என் விருப்பங்கள் இவ்வளவுதான். கவனம் வேறு பக்கம் சென்றதில்லை. அமைந்த சூழல் அப்படி. என் அப்பா, சிறுவயதில் என்னை யோகிராம் சூரத்குமார் பஜனைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். அவரைக் கற்பது, சொற்பொழிவுகளைக் கேட்பதில் தொடங்கி என்னுடைய 27வது வயது வரை வாழ்க்கை...